வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 26 அக்டோபர் 2019 (16:07 IST)

சத்தமா போட்றா... பிகிலே! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா..!

அட்லீ விஜய் இயக்கத்தில் தீபாவளி ஸ்பேஷலாக நேற்று வெளியான பிகில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு வெயிட்டான தீபாவளியாக இந்த வருடம் அமைந்துள்ளது. படம் வெளியான நாள் முதலே அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது கிடைத்துள்ளது. அந்தவகையில் நேற்று ரூ.1.79 கோடி வசூல் செய்துள்ளது. அதன்படி இந்த வருடம் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் முதல் இடத்தை பிகில் படம் பிடித்துள்ளது. மேலும் ரஜினியின் 2.0 , மற்றும் சர்கார் படங்களை  அடுத்து சென்னையில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்பதை பிகில் சாதனை படைத்துள்ளது. 
 
மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ஞாயிறு , திங்கள் என விடுமுறை நாட்கள் என்பதால் நிச்சயம் நிறைய வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கலாம்.