திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (17:17 IST)

பிகில் - 4 திரையரங்குகளில் 4 நாட்களாக ஹவுஸ் புல் ...கருப்பு வேஷ்டி சட்டையில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம்

பெரும் பரபரப்பிற்குள் இடையே வெளியான பிகில் திரைப்படம் இன்று கரூரில் 4 திரையரங்குகளில் 4 நாட்களாக ஹவுஸ் புல் ஆனது – பிகில் கருப்பு வேஷ்டி சட்டைகள் அணிந்து ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ! வெடி வைத்தும் ஆரவாரமாக கொண்டாடினர்.
சினிமா உலகில் இளைய தளபதி என்றும் இன்றும் ரசிகர்களால் கூறப்பட்டு ஆங்காங்கே பெரும் விமர்சனத்திற்கு ஆளாகும் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்த பிகில் திரைப்படம், சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு தடைவிதித்து பின்னர் நேற்று மாலை அனுமதி அளித்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்யப்பட்ட பிகில் திரைப்படம் நேற்று இரவு கரூரில் உள்ள 4 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பெரும் விளம்பரமாக வரும், ஆங்காங்கே பிளக்ஸ் கள் வைப்பார்கள் மற்றும் பால் அபிஷேகம் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், கரூரில் ரசிகர்கள் திரையரங்குகளின் முன்னர் அதுவும் திரையரங்குகளுக்குள்ளேயே பிளக்ஸ்கள் வைத்ததோடு, அந்த திரையரங்க வளாகத்திற்குள்ளேயே, பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள். ஆங்காங்கே டிரம் செட் வைத்து ஆடலும், பாடலும் என்று கலை கட்டிய பிகில் திரைப்படத்தினால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

மேலும், 4 தினங்களாக, இந்த 4 திரையரங்குகளிலுமே பிகில் திரைப்படம் ஹவுஸ்புல் ஆனது.