செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (20:48 IST)

விஜய் ரசிகர் ஏற்படுத்திய விபத்தில் 2 வயது குழந்தை மரணம்

இன்று விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியானதை அடுத்து இன்று காலை, முதல் நாள் முதல் காட்சி பிகில் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து வருகின்றனர் 
 
விஜய் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் மிக வேகமாக இயக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் பிகில் படத்தை பார்க்க பைக்கில் ஒரு விஜய் ரசிகர் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், கண்மண் தெரியாமல் அவர் வேகமாக ஓட்டிச்சென்றதால் ஏற்பட்ட ஒரு விபத்தில் 2 வயது குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இதனை அடுத்து விபத்து ஏற்படுத்திய அந்த விஜய் ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நல்லாத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் என்றும் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் ஒவ்வொரு விஜய் படம் வெளியாகும் போது முதல் காட்சியை அவர் பார்த்து விடுவார் என்றும் தெரியவந்துள்ளது
 
இதனை அடுத்து அவர் குடிபோதையில் பைக் ஓட்டினாரா? என்பது குறித்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு வயது குழந்தையை இழந்த அந்தப் பெற்றோர்களுக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது