திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 11 டிசம்பர் 2019 (12:37 IST)

ரசிகர்களின் சொல் பேச்சை கேட்டு பிகில் அம்ரிதா வெளியிட்ட போட்டோஸ் - குவியும் லைக்ஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்த இப்படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர்.
 
அந்த லிஸ்டில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் தென்றல். இவர் பிகில் படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். இவரது கதாபாத்திரத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் இவர் "படைவீரன்" படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விஜய் ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கினர்.  இதனால் விஜய் ரசிகர்கள் ப்ளீஸ் இப்படியெல்லாம் ட்ரை பண்ணாதீங்க என்று அட்வைஸ் கொடுத்தனர். இந்நிலையில்  தற்போது அவர்களின் சொல் பேச்சை கேட்டு ட்ரடீஷ்னல் உடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.  இதை கண்ட ரசிகர்கள் உடனே " இதை ...இதை... இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என புகழ்ந்து வருவதோடு எக்கச்சக்கமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.