திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (16:27 IST)

நயன்தாரா கேரக்டரில் நடிக்கும் ‘பிகில்’ நடிகை!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது மட்டுமன்றி இந்த படத்தில் நடத்த அனைவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் பிகில் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த ரெபா மோனிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. குறிப்பாக கன்னடத்தில் உருவாகவிருக்கும் ’நானும் ரவுடிதான்’ படத்தின் ரீமேக் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் 
 
தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் நயன்தாரா நடித்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது திகில் படத்தில் நடிக்கும்போதே தன்னுடைய நடிப்புக்கு நயன்தாராவிடம் இருந்து பாராட்டு பெற்றார் தற்போது அவர் நடித்த கேரக்டரில் ரெபா மோனிகா நடிக்க இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் நடித்தபோது நயன்தாராவிடம் பாராட்டு பெற்ற ரெபா, தற்போது அவர் நடித்த கேரக்டர் ஒன்றிலேயே நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படம் ரிலீசான பிறகு கன்னட மொழியில் தனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே மலையாளத்தில் 2 படத்தில் நடித்து கொண்டிருக்கும் ரெபாமோனிகா தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது