புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (09:31 IST)

ஒரே மாதத்தில் ‘கைதி’ தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு: திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்துடன் மோதி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் கார்த்தியின் ‘கைதி’. இந்த திரைப்படம் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூபாய் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
இந்த நிலையில் இந்த படம் சென்னை உள்பட பல நகரங்களில் இன்னும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென ‘கைதி’ படத்தின் தயாரிப்பு தரப்பினர் இந்த படத்தை இன்று முதல் ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாக அனுமதி அளித்துள்ளனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கைதி திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் ஹாட்ஸ்டார் செயலில் அனுமதிப்பது தவறு என்றும் இதனால் திரையரங்குகளுக்கு வரும் ஒரு சில ரசிகர்களும் வரமாட்டார்கள் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் 
இந்த நிலையில் சென்னையின் முன்னணி திரையரங்கம் ஒன்றில் ‘கைதி’ திரைப்படத்திற்கு ஓரளவு கூட்டம் வந்து கொண்டிருந்த போதிலும் திடீரென அந்த படத்தை தூக்கிவிட்டு அதிரடி செய்துள்ளனர்
 
ஒரு திரைப்படம் நல்ல வசூலை திரையரங்களில் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் போன்ற செயலில் வெளியிடுதல் சரியா? என்று திரையரங்கு உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தபோது, ‘கைதி படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்துவிட்டது. மேலும் ஆன்லைன் பைரசியிலும் இந்த படம் வந்துவிட்டதால் இதனை செயலிக்கு அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.