செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (18:08 IST)

வலிமை படப்பிடிப்பில் அஜித்… பரபரப்பில் ஹெச் வினோத் !

வலிமை படப்பிடிப்பு தளத்துக்கு அஜித் சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை டெல்லியில் நடத்தலாம் என படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது சம்மந்தப்பட்ட இடத்தில் அனுமதி வழங்க மறுத்துள்ளது டெல்லி அரசு. இதனால் அந்த காட்சிகளை அப்படியே வைத்துவிட்டு அஜித் இல்லாத காட்சிகளை இப்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் படமாக்கி வருகிறாராம் ஹெச் வினோத்.

இந்நிலையில் இப்போது படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டுள்ளாராம். இதற்காக அவர் காரிலேயே சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றுள்ளாரம். இப்போது ஹூமா குரேஷியுடனான காட்சிகளைப் படமாக்கிவிட்டு பின்னர் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கி ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கவுள்ளாராம் ஹெச் வினோத்.