அஜித்-சுதா கொங்காரா படத்தை தயாரிக்கும் கமல் பட நிறுவனம்!

ajith sudha
அஜித்-சுதா கொங்காரா படத்தை தயாரிக்கும் கமல் பட நிறுவனம்!
siva| Last Modified செவ்வாய், 27 அக்டோபர் 2020 (19:59 IST)
கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் என்ற படத்தை தயாரித்த ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தான் அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும், ஏற்கனவே விஜய்க்கு கூறிய கதையை தான் சிறிது மாற்றம் செய்து அஜீத்துக்காக தயார் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி அஜித், சுதா இணையும் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் கமல்ஹாசனின் தூங்காவனம் உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :