1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (19:57 IST)

குழந்தை பெற்ற பின் மீண்டும் நாயகியாகும் அஜித் பட நாயகி!

அஜீத் நடித்த அசல், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம்,  உள்பட பல திரைப் படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் 
 
இந்த நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது மீண்டும் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார். விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படம் ஒன்றை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில்தான் சமீராரெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே விஷாலுக்கு ஜோடியாக இந்த படத்தில் மிருணாளினி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஏற்கனவே ஆர்யாவும் சமீரா ரெட்டியும் வேட்டை என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது