செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (11:40 IST)

மிஸ் இந்தியா பட்டம் இல்ல.. அது ஒரு ப்ராண்ட்! – வெளியானது மிஸ் இந்தியா ட்ரெய்லர்

கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் ஓடிடி மூலமாக வெளியாகவுள்ள மிஸ் இந்தியா படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது மிஸ் இந்தியா திரைப்படம். பாரம்பரியமான டீ விற்பனையை உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற்ற முயலும் எம்பிஏ படித்த சம்யுக்தா என்ற பெண்ணுக்கும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. நடிகையர் திலகத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பெண்ணியமைய திரைப்படம் இது.

முந்தைய படங்களில் இருந்த அளவு இல்லாமல் இந்த படத்திற்காக பெருமளவில் உடல் எடையை குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ட்ரெய்லரை பார்த்த பலர் இந்த படத்திற்காகவும் கீர்த்தி விரைவில் தேசிய விருது பெறுவார் என பாராட்டி வருகின்றனர். இந்த படம் நவம்பர் 4 அன்று நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.