1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:55 IST)

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் உறவினர்கள்: இனி ஒரே செண்டிமெண்ட் தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் 70 நாட்கள் முடிவடைந்தவுடன் போட்டியாளர்களின் உறவினர்கள் வருவார்கள் என்பதும் அப்போது ஒரே சென்டிமென்டாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.
 
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கியுள்ளனர். இன்றைய முதல் புரோமோ அக்ஷராவின் அண்ணன் மற்றும் தாயார் வருகின்றனர் என்பதும் இரண்டாவது பிரிவில் சிபியின் மனைவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இனி அடுத்தடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக தனது மகனை பார்க்க வேண்டும் என தாமரை ஏற்கனவே கூறிய நிலையில் தாமரை மகனையும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வர விஜய் டிவி நிர்வாகத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தாமரை மகன் வரும்போது விஜய் பிக் பாஸ் வீடே சென்டிமென்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது