1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:25 IST)

ராஜுவின் செயலால் கண்ணீர் விட்டு அழுத சஞ்சீவ் - என்ன மனுஷன்யா...!

இன்று வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ பலரையும் மனம் உருக செய்துள்ளது. ராஜுவின் செயலை கண்டு பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட 8 போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய டாஸ்க் கொடுக்கபட்டது. 
 
டாஸ்கின் விதி: 
 
இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து தங்கள் கையில் கொடுக்கட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் எதையேனும் ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அந்த ஜோடி ஒரே நபரின் புகைப்படங்களை காட்டுகிறார்களோ அவர் இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுவார். 
 
சஞ்சீவை காப்பாற்றிய ராஜு:
 
அதில் ராஜு, சஞ்சீவினின் மகள் குடும்பமாக பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது அந்த வீட்டை சுற்றி பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார்.எனவே அவர்கள் வரும் வரை சஞ்சீவ் இங்கு இருக்கவேண்டும் என கூறி அவரை காப்பாற்றி பெருந்தனையுடன் நடந்துக்கொண்டு சஞ்சீவை மட்டுமல்லாது ஆடியன்ஸ் அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார்.