1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (21:45 IST)

’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் பிரபலம்!

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்த படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பதும், ’ஓ சொல்றியா மாமா’என்று தொடங்கும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி அதன் வீடியோவை இணையதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி நடனமாடிய அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
இந்த வீடியோ தற்போது வைரலாகிய போதிலும் பல நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது