செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:25 IST)

பிக்பாஸ் பாலாஜி தந்தை காலமானார்: சக போட்டியாளர்கள் சோகம்!

பிக்பாஸ் பாலாஜி தந்தை காலமானார்: சக போட்டியாளர்கள் சோகம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தந்தை சற்றுமுன் காலமானார். இதனையடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் ஒரு சில நாட்களில் அவரது தந்தை எதிர்பாராத வகையில் மாரடைப்பு காரணமாக காலமானார்
 
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பாலாஜியின் தந்தையும் காலமாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சக போட்டியாளர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக் கோழியாக இருந்தவர் பாலாஜி என்பதும் தனது தந்தை குறித்தும் தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தவர் என்பதும் தெரிந்ததே. இருப்பினும் தந்தையின் மறைவு குறித்து தனது டுவிட்டரில் சோகமாக ’இதுவும் கடந்து போகும்’ என்று பாலாஜி பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் அளித்து வருகின்றனர்