1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (07:45 IST)

நேற்று ஸ்டாலின், இன்று உதயநிதி: இந்துக்களே உஷார் என பிக்பாஸ் நடிகை டுவீட்

நேற்று ஸ்டாலின், இன்று உதயநிதி: இந்துக்களே உஷார்
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கையில் வேல் வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை அடுத்து அவரது மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் கையில் வேல் வைத்துக்கொண்டு கொடுத்த போஸ் ஒன்றின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
இந்த போஸ் குறித்து பாஜக நிர்வாகியும் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நேற்று ஸ்டாலின் வேல் ஏந்தி இந்துக்களை ஏமாற்றினார். இன்று அவரது மகன் உதயநிதி  வேலை ஏந்தி நாடகமாடுகிறார். 
 
வினாயகர் சதுர்த்திக்கு தனது மகள் கேட்டுகொண்டதால் வினாயகர் படத்தை டிவிட்டரில் போட்டதாக அன்று சொன்ன உதயநிதி இன்று தேர்தலுக்காக இந்து ஓட்டுக்களை  பெற தந்தையுடன் சேர்ந்து நாடகமாடுகிறார் இந்துக்களே உஷார் இவர்கள் எத்தனை வேடம் போட்டாலும் வரும் தேர்தலில் இந்த இந்து விரோதிகளை விரட்டுவோம்