1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (08:41 IST)

திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் எப்போது…? அப்டேட் வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடந்தது.

இதையடுத்து படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருச்சிற்றம்பலம்  டிரைலர் வெளியாகும் என வெளியிட்டுள்ள வீடியோவை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது.