திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (14:36 IST)

கப்பை உடைக்கும் பொன்னம்பலம்: காண்டாகும் ஐஸ்வர்யா (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், யாஷிகா ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், செண்ட்ராயனை பாலாஜி திட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில், நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் போலீஸ் திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் யாஷிகா, டேனியல் மற்றும் ஐஸ்வர்யா திருடர்களாக உள்ளனர். மும்தாஜ், செண்ட்ராயன் மற்றும் மகத் போலீசாக உள்ளனர். இந்த டாஸ்கின் போது பொன்னம்பலம் கப்பை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் ஐஸ்வர்யா கோபமடைகிறார்.