திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (15:35 IST)

வேலைக்காரியை போல் நடத்துவதாக வைஷ்ணவியிடம் புகார் கூறும் மும்தாஜ்: யாரை பற்றி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமா தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமாக்கள் ஏற்கனவே வெளியடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், மும்தாஜ், இனிமேல் உங்களோட பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது என்று டேனியலை பார்த்து கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இரண்டாவது வீடியோவில், வைஷ்ணவி கேப்டன்ஷிப் குறித்து பாலாஜி திட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
 
இந்நிலையில் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மும்தாஜ் வைஷ்ணவியிடம், டேனி வேலைக்காரங்ககிட்ட பேசுற மாறி பேசுகிறார் என்பது போல் கூறுகிறார். இதனால் இன்று பிக்பாஸ் வீட்டில் பெரிய சண்டை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.