நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆண் குழந்தை: தம்பிகள் மகிழ்ச்சி

Last Modified வெள்ளி, 11 ஜனவரி 2019 (19:17 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளான கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சீமான் - கயல்விழி தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கயல்விழிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சீமானுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அவரது தம்பிகள் கொண்டாடி வருகின்றனர்.


இந்த நிலையில் சீமான் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :