1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (17:36 IST)

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பணப்பெட்டி.. இந்த முறை யார்?

money
பிக் பாஸ் வீட்டில் நேற்று பணம் மூட்டை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிக் பாஸ் வீட்டில் நேற்று மூன்று லட்சம் மதிப்புடைய பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று திடீரென பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இரண்டாவது முறையாக பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
மூன்று லட்சம் முதல அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பணப்பெட்டியின் மதிப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகும் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இரண்டாவது முறையாக இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லும் போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva