1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (10:45 IST)

டிவிட்டரில் பிக்பாஸ் கணேஷ் எதை பற்றி சொன்னார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து இறுதிச்சுற்று வரை சென்று டைட்டிலை தவறவிட்டவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். பிக்பாஸ் இறுதிப்போட்டியில்  நான்காமிடமே பிடிக்க முடிந்தது.

 
பிக்பாஸ் வீட்டுக்குள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை சொல்லாமல் உண்மையாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆதரவு குவிந்தது. தற்போது மனைவியுடன் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்ற புகைப்படத்தை  பதிவிட்டுள்ளார். அதில் உண்மையான காதலின் அடையாளமே தியாகம்தான். என்னை புரிந்துகொண்டு ஆதரவாக இருந்ததற்கு  நன்றி பேபி, என்றும் குறிப்பிட்டுள்ளார்.