வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (05:07 IST)

'பக்கத்து வீட்டு கதவை தட்டிய நடிகை ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா நடித்த 'தரமணி' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சித்தார்த் நடிக்கும் மும்மொழி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.



 
 
தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள பாலிவுட் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படம் தமிழில் 'அவள்' என்ற பெயரில் உருவாகிறது. மேலும் இதே படம் தெலுங்கிலும் உருவாகவுள்ளது.
 
மிலிந்த் இயக்கவுள்ள இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று சித்தார்த், ஆண்ட்ரியா இருவருமே தங்கள் டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர். பக்கத்து வீட்டு கதவை தட்டும் கவர்ச்சியான வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ஆண்ட்ரியாவுக்கு மார்க்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது