வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 30 ஜூன் 2017 (18:03 IST)

உன் பிரிவு கொல்கிறது - கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா உருக்கம்

தன்னுடைய கணவனை பிரிந்திருப்பது மிகவும் துயரமாக இருக்கிறது என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள  நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள பிரபலங்களில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். நேற்று அவரது மனைவி நிஷாவின் பிறந்த நாள் ஆகும். சென்ற வருடம்தான் இருவருக்கும் திருமணம் ஆனது. எனவே, நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரமுடியாது என்பதால், கணேஷால் தன்னுடைய காதல் மனைவியுடன் இருக்க முடியவில்லை. எனவே, நேற்று பிக்பாஸ் வீட்டிலேயே அவர் கேக் வெட்டி தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை கொண்டாடினார்.


 

 
இந்நிலையில் அவரின் மனைவி நிஷா தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் “ என் கரங்கள் பிடித்து நீங்கள் நடக்கும் நிகழ்வை இழக்கிறேன். உங்களுக்கு சரியாக பாட வராது எனினும் எனக்காக பாடுவீர்கள். என்னை சந்தோஷப்படுத்துவதற்காக எப்போதும் எனக்காக எல்லாவற்றையும் செய்வீர்கள். இப்போது என்னுடன் நீங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னை பிரிந்து நீங்கள் வெகுதூரம் இருப்பது என்னை கொல்கிறது. ஆனால், உங்களை மீண்டும் சந்திப்பேன் என்கிற உண்மை எனக்கு காத்திருப்பதற்கான பலத்தை கொடுக்கிறது” என அவர் உருகியுள்ளார்.