வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (13:11 IST)

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி!

முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர் முக ஸ்டாலின் என தமிழக முதலமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார் 
 
இன்று கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் 'கலைஞானி' @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
 
முதல்வரின் இந்த வார்த்தைக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்து கூறியிருப்பதாவது: இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான  
@mkstalin அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும்.