செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (21:57 IST)

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஸ்ருதி வெளியிட்ட முதல் வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் நியமாகவும், தைரியமாகவும் விளையாடி ஸ்ருதி நேற்று வீட்டை விட்டு எவிக்ஷனில் வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் அந்த நாணயம் தான். இருந்தும் அவரை வெளியேறியது நியாயமில்லை என ஆடியன்ஸ் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
 
ஸ்ருதி வீட்டில் இருப்பதற்கு தகுதியான போட்டியாளர்தான். அவரை விட அபிநய் அப்படி ஒன்று செய்துவிடவில்லை. ஸ்ருதி நேர்மையாக விளையாடி அனைவரையும் கவர்ந்தார் என ஆடியன்ஸ் கூறினார். மேலும் அவர் வெளியேறு போது அவருக்கு ஆதரவு கொடுத்து நல்ல முறையில் தான் வெளியேற்றினர். 
 
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஸ்ருதி முதல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  என்னை உங்களில் ஒருவரான நினைத்து எனக்கு சப்போர்ட் செய்த  அனைவருக்கும் நன்றி. இந்த 10 நாளில் நீங்கள் எனக்கு டைட்டில் வென்றது போல் பெரும் மகிழ்ச்சியை கொடுத்து ஆதரவளித்தீர்கள். இனி நான் புதிய பயணத்தை தொடங்கவுள்ளேன் அதற்கு உங்களது அன்பு தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறேன். என கூறினார்.