1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:29 IST)

லூசு பையா...கதறி அழுத அமீருக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்னனு பாருங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான அமீர் கலந்துக்கொண்ட வெகு சீக்கிரத்தில் மற்ற போட்டியாளர்களை விட பெருமளவில் பிரபலமாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் பாவினி என்றே கூறலாம். இந்த வராம் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார் பிக்பாஸ். 
 
இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அமீர் தனது சோகக்கதையை கூறி அனைவரையும் அழ வைத்துவிட்டார். அதாவது, என் அப்பாவை நான் பார்த்ததே இல்லை. நான், அம்மா , அண்ணா என உலகத்தில் இவர்கள் மூன்று பேர் தான். 
 
எங்க அம்மாவுக்கு நான் பெரிய டான்சர் ஆகவேண்டும் என்று ஆசை. அதற்காக என்னை பிரபுதேவா நடனங்களை பார்த்து ஆட சொல்லுவார். இன்று நான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த இடத்தில் நிற்கிறேன் இதனை பார்த்து மகிழ என் அம்மா என்னுடன் இல்லை என கூறி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரது மனதையும் உருக செய்துவிட்டார். 
 
இதை பார்த்த ஆடியன்ஸ் ஒருவர், லூசு பையா இவ்ளோவ் கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு எதுக்கு வந்தியோ அதில் கவனத்தை செலுத்துடா. அதை விட்டுவிட்டு பாவினி பின்னாடி சுத்தி லைஃப் வேஸ்ட் பண்ணிக்காதே... என அட்வைஸ் கூறி வருகின்றனர்.