செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (13:52 IST)

இந்த வாரம் அறுக்கப்போற ஆடு ஆஜித்... உனக்கு இன்னா ஆரி மேல இம்புட்டு காண்டு..?

பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் மக்களின் விருப்பப்படி ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் அர்ச்சனாவை தொடர்ந்து ஆஜீத் வெளியேற வேண்டும் என எண்ணியிருந்த ஆடியன்ஸ் தற்போது ரம்யா மீது செம காண்டாகி  இந்த வாரமே அவர் வெளியேறவேண்டும் என கொந்தளித்து வருகின்றனர். 
 
காரணம் ரம்யா எப்போதும் ஆரியை குறித்து அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்புடனே இருக்கிறார். அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் வீட்டிலிருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாட்டினியா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இதில் இரண்டு போட்டியாளர்கள்  சேர்ந்து ஒருவரது கையை குறிவைத்து அடிக்க வேண்டும். அடித்த நபர் என்ன கேள்வியை வேண்டுமாலும் கேட்டும் அதற்கான பதிலை எதிர் தரப்பில் இருந்து புடுங்காலம். இதில் எப்போதும் போலவே ரம்யா பாண்டியன் ஆரியை டார்கெட் செய்து உன்னை அடுத்த வாரம் நாமினேட் செய்யவேண்டும் என கூறி அவர் மீதான வெறுப்பை கக்கி மக்களிடம் வாங்கிக்கட்டி வருகிறார். இதை கேட்டு கடுப்பான ஆரி ஆர்மிஸ்... பிக்பாஸ் நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது... இந்த வாரம் டபுள் விக்ஷன் கொடுத்து ஆரி மற்றும் கேபியை வெளியேற்றுங்கள் என்று கூறினார்.