வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (15:29 IST)

என் புருஷன பத்தி நீ பேசாதே... கொந்தளித்த அனிதா!

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அன்பு , பாசம் , அக்கறை என ஒருவருக்கொருவர் ஃபேமிலியாக இருந்து நாடகமாடி வந்தனர். ஆனால், தற்ப்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க அவரவர் தங்களது விளையாட்டை போட்டிப்போட்டு விளையாடி டைட்டில் கார்ட் அடிக்ககாத்திருக்கின்றனர்.
 
இதற்கிடையில் ஆடியன்ஸின் பெரிய தலைவலியாக பார்க்கப்பட்ட அர்ச்சனா நேற்று எவிக்ஷனில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாட்டினியா? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு போட்டியாளர்கள் சேர்ந்து ஒருவரது கையை குறிவைத்து அடிக்க வேண்டும். அடித்த நபர் என்ன கேள்வியை வேண்டுமாலும் கேட்டு அதற்கான பதிலை எதிர் தரப்பில் இருந்து புடுங்காலம். 
 
இப்படியான நேரத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில்  ஷிவானி ஆரியிடம் இந்த வீட்டில் யார் demotivate ஆக இருக்கிறார் என்ற கேள்விக்கு ஆரி அனிதாவை சுட்டிக்காட்டி அவர் வீட்டை விட்டு பிரிந்திருப்பதாக அழுதது தான் என கூறினார். உடனே அனிதாவுக்கு சுந்தரமுகி போல் முகம் மாறிவிட்டது. என் அப்பா அம்மா பத்தியோ என் புருஷன பத்தியோ பேசாதே ஆரி என சம்மந்தமே இல்லாமல் கத்தி சீன போட்டார். இப்ப மட்டும் இம்புட்டு கோவம் வருதே  இந்தம்மாவுக்கு அர்ச்சனா பிரபாவ பத்தி ரொம்ப பாவம்னு சொன்னப்ப சிரிச்சுட்டு கம்முனு தான் இருந்தாங்க... அப்போ இதெல்லாம் வெறும் நடிப்பா முருகேசா...? உண்மையிலே பிரபாகர் பாவம் தான்...