புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (17:40 IST)

ஒழுங்கான டாஸ்க் இல்லை..ஒன்றும் இல்லை....சிம்பலி வேஸ்ட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளே இல்லாமல் நான்கு போட்டியாளர்களை வைத்துக்கொண்டு ஈ ஒட்டி வந்தனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் ஒட்டுமொத்தமாக குறைந்து  டல் அடிக்க ஆரம்பித்தது. மக்கள் தர்ஷன், கவின் என டைட்டில் வின்ரை தேர்வு செய்து ஓட்டு போட்டு வந்த நேரத்தில் திடீரென கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவராகவே வெளியேறினார். தர்ஷன் காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். 


 
அதன் பிறகு தான் தெரிந்தது ஓட்டுக்கள் போடுவதெல்லாம் சும்மா...சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி முடிவு செய்துவிட்டால் அவர்கள் விருப்பப்பட்ட நபருக்கு தான் டைட்டில் வின்னர் கொடுப்பார்கள் என்பது அப்பட்டமாக தெரிந்தது. பின்னர் ஷெரின்,  சாண்டி , முகின் ,லொஸ்லியா என நான்கு பேரை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு நாளை ஓட்டமுடியவில்லை என்பதை சுதாரித்துக்கொண்ட பிக்பாஸ் மீண்டும் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்களான வனிதா, கஸ்தூரி, அபிராமி, சாக்ஷி உள்ளிட்டோரை இறங்கியுள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில் டல்லடித்த நிகழ்ச்சிக்கு பாலீஷ் போடும் வகையில் வீட்டிற்குள் 8 புதிய நபர்கள் நுழைந்துள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் போட்டியாளர்களை கேள்வி கேட்டு அவரவர்களுக்கு  மதிப்பெண்களையும் வழங்கியுள்ளனர்.