புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (12:29 IST)

நீ எதுக்கு அவனுக்கு லவ் லெட்டர் எழுதின..? ஷெரினை கதறவிடும் வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பழைய போட்டியாளர்களாக வனிதா , சாக்ஷி , கஸ்தூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக நுழைந்துள்ளார். வெறும் 4 பேரை வைத்துக்கொண்டு நான்கு நாளைக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொன்டு செல்ல முடியாமல் விஜய் டிவி திணறி வருகிறது. இதனால் எதையாவது செய்து எப்படியாவது இந்த நான்கு நாளை ஒட்டிவிடவேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வருகிறது. 


 
வனிதா ஒரு ஆளை மட்டும் உள்ளே அழைத்து வந்தால் இன்னும் 100 நாள் கூட ஓட்டிவிடலாம் என எண்ணத்தில் பிக்பாஸ் இருந்துவருகிறார், அந்தவகையில் தற்போது ஃபைனலுக்காக காத்துக்கொண்டிருக்கும் ஷெரினிடன் வீண் வம்பு  இழுத்து சன்டையிடுகிறார் வனிதா. உன்னால் தான் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டான் என கூறி சண்டை போட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில் " நீ எதுக்கு அவனுக்கு லவ் லெட்டர் எழுதி கொடுத்த..? என முடிந்துபோன விஷயத்தை கேட்டு வம்பிழுக்கிறார். இதனால் ஷெரின் பாத்ரூமில் சென்று அழுகிறார்.. அவருக்கு சப்போர்ட்டாக கஸ்தூரியும் சாட்சியும் ஆதரவு சொல்கிறார்கள்.