வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: புதன், 2 அக்டோபர் 2019 (17:22 IST)

லொஸ்லியா டைட்டில் வின்னரா...? அநியாயம் பண்ணாதீங்கடா டேய் - கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. கடைசி கட்டத்தை நெருங்க நெருங்க பிக்பாஸ் சுவாரஸ்யத்தை இழந்து வருகிறது. வனிதா பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மீண்டும் நுழைந்து தன்னால் முடிந்த சம்பவத்தை செய்து வருவதால் ஓரளவிற்கு ஓடுகிறது. அதுவும் இல்லையென்றால் கடையை சாத்திவிட்டு கிளம்ப வேண்டியது தான். 


 
மக்கள் தாங்கள் விருப்பப்பட்டவர்களுக்கும் , நல்லவர்களுக்கும் நியாயமான ஒட்டு போடவேண்டும் என கருதி முகினுக்கு ஓட்டுக்களை போட்டுவருகின்றனர். ஆனாலும், கடைசியில் பிக்பாஸ் முடிவே கடைசி முடிவு என்று கூறி தொலைக்காட்சி விரும்பும் ஒரு போட்டியாளரை டைட்டில் வின்னர் ஆக்கிவிடுவார்கள்.
 
அந்த வகையில் தற்போது ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் " நான் முகினுக்கு ஓட்டு போட்டேன். ஆனால், என் ஓட்டு லொஸ்லியாவுக்கு விழுகிறது. என்று கூறியுள்ளார். விஜய் டிவி தாங்கள் விருப்பப்பட்ட நபருக்கு தான் டைட்டில் கார்ட் என்றால் மக்களை ஏன் முட்டாளாக்குகிறீர்கள் என கேட்டு வருகின்றனர். லொஸ்லியா டைட்டில் வின் செய்வது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் நெட்டிசன்ஸ் பலரும் பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா உருப்படியான காரியம் எதாவது செய்தாரா..? சாப்பிட்டு... சாப்பிட்டு தூங்கினால்..தூங்கி எழுந்து கவினை காதலித்தால்  அவ்ளோவ் தான். அதுக்கு பேசாம வனிதாவுக்கு டைட்டில் கார்டு கொடுங்கள் என கூறி வருகின்றனர்.