1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (17:02 IST)

பிக்பாஸில் கவின் சம்பாதித்த பணம் மொத்தம் இவ்வளவா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின் லொஸ்லியாவுடன் காதல் செய்தே 95 நாட்களை ஒட்டிவிட்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளை கருத்தில் கொண்டு பிக்பாஸ் அறிவித்த சலுகை தொகை ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். 


 
இந்நிலையில் தற்போது கவினின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றிற்கு ரூ.35,000 சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்தால் கவின் வீட்டிற்குள் இருந்த 95 நாட்களுக்கு ரூ.33 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர். மேலும் கூடுதலாக வாங்கி சென்ற  ரூ.5 லட்சத்தை சேர்த்தால் மொத்தம் ரூ. 38 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார். 
 
இந்த பணத்தை வைத்து தனது குடும்பத்தில் நிலவிய பணப்பிரச்னையை தீர்த்துவிட்டு கோலிவுட் சினிமாவில் ஒரு நல்ல துவக்கத்தை மீண்டும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.