புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (09:18 IST)

பிக்பாஸ் வீட்டில் மிராமிதுன்: கண்டுகொள்ளாத போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் மட்டும் கவின் மற்றும் தர்ஷன் என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டதால் தற்போது லாஸ்லியா, ஷெரின், சாண்டி மற்றும் முகின் என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடே வெறிச்சோடி உள்ளது 
 
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக மாற்ற நான்கு சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் மீராமிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் ஆவர். இந்த நால்வரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்று உற்சாகம் அளிக்கின்றனர். இந்த நால்வரின் வருகையை அடுத்து பிக்பாஸ் வீடு மீண்டும் கலகலப்பாய் உள்ளது
 
இருப்பினும் ரேஷ்மா, பாத்திமா பாபு, மோகன்பாபு ஆகியோர்களை கண்டுகொண்ட அளவுக்கு மீராவை யாரும் கண்டுகொள்ளவில்லை. சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன்  மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளதால் பிக் பாஸ் வீட்டில் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வாரம் ஞாயிறு அன்று இறுதி போட்டி நடைபெறவுள்ளது என்பதும், அன்றைய தினம் இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது