பிக்பாஸ் நிகழ்ச்சியால் உண்மையிலேயே புகழ் கிடைக்கின்றதா?

Biggboss
Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (21:00 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும், கோலிவுட் திரையுலகம் அவர்களை வாழவைக்கும் என்றும், பல வாய்ப்புகள் குவிந்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது

கமல்ஹாசன் கூட அடிக்கடி ’நீங்கள் வெளியே வந்தவுடன் உங்களுக்கு பெரும்புகழ் காத்திருக்கிறது’ என்று பில்டப் செய்வது வழக்கம். ஆனால் உண்மை நிலை என்னவெனில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த யாரும் பெரிய அளவில் புகழ் பெறவில்லை என்பதுதான்


பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ் மற்றும் ரித்விகா ஆகிய இருவருக்கும் இன்னும் ஒரு படம்கூட வெளியாகவில்லை. அவர்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்களும் பெரிய அளவில் பேசப்படும் படங்களாக இல்லை என்பதால் அந்த படங்கள் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக புகழ் பெற்றவர் ஓவியாதான். ஆனால் அவருக்கும் ஒரு படம் கூட உருப்படியாக வரவில்லை. தற்போது அவர் வாய்ப்பின்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பலரும் கோலிவுட் திரையுலகில் நடித்து கொண்டிருந்தாலும் எந்த போட்டியாளரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளும் கைநழுவிப் போய் இருக்கிறது நடிகை மீரா மிதுனுக்கு. மீரா மிதுன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது

மேலும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்


மேலும் மீராமிதுனை இனி எந்த கோலிவுட் இயக்குனர்களும் அழைக்க வாய்ப்பில்லை என்றும் கோலிவுட் திரையுலகில் அவருடைய கதை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கருதப்படுகிறது

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும்போது அந்த போட்டியாளர்களுக்கு கிடைக்கும் புகழ், நிகழ்ச்சி முடிந்தவுடன் இல்லை என்பதும் வழக்கம்போல் மக்கள் அவர்களை மறந்து விடுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை


இதில் மேலும் படிக்கவும் :