வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (12:34 IST)

தனுஷ் படத்துடன் மோதும் சந்தானத்தின் படம்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ரிலீஸாகும் நாளில் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படமும் ரிலீஸாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் கடந்த ஆண்டே முடிக்கப்பட்ட நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அதேநாளில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் ரிலிஸாகவுள்ளது. சந்தானம் நடிப்பில் உருவான ஏ 1 படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர்  ஜான்சன் இயக்கியுள்ள இந்த திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.