1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified புதன், 24 மே 2023 (20:53 IST)

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவின் மகன் இயக்கும் புதிய படம்!

markazhi thingal
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவின் மகனும்  நடிகருமான மனோஜ்  இயக்கவுள்ள முதல் படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் ஹீரோவாக அறிமுகமான படம் தாஜ்மஹால். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூன், கடல் பூக்கள்  உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த மாநாடு என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் மனோஜ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் 'மார்கழி திங்கள்' என்ற படத்தின் மூலம்  மனோஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரடெக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.