லியோ படத்தின் Audio Rights இத்தனை கோடியா? வியாபாரம் சூடு பிடிக்குது!
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர்.
படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் லியோ படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூபாய் 15 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் ஆடியோ ரைட்ஸ் ரூபாய் 15 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் லியோ படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.