நாசருக்கு பாக்யராஜ், விஷாலுக்கு ஐசரிகணேஷ்: சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்!

Last Modified வெள்ளி, 7 ஜூன் 2019 (19:05 IST)
ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்பட தற்போது உள்ள நிர்வாகிகள் அவரவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்த முறை சரத்குமார் அணி என்ற ஒன்றே இல்லாததால் எளிதில் பாண்டவர் அணி
வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஐசரிகணேஷ் தலைமையில் ஒரு புதிய அணி உருவாகி நடிகர் சங்க தேர்தலில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் போட்டியிடவுள்ளார். அதேபோல் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷும், கார்த்தியை எதிர்த்து ஜெயம் ரவியும், துணை தலைவர்கள் பதவிக்கு குட்டிபத்மினி, உதயாவும் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ஐசரி கணேஷ் நடிகர், தயாரிப்பாளர் மட்டுமின்றி கல்வியாளர் என்ற பெயரெடுத்து சமூகத்தில் பெரிய புள்ளியாக இருப்பதால் அவரது அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இந்த அணிக்கு சரத்குமார், ராதாரவி குழுவினர்களும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாண்டவர் அணி இந்த முறை வீட்டுக்கு செல்வது உறுதி என நடிகர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.இதில் மேலும் படிக்கவும் :