திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:56 IST)

’’சூப்பர் தலைவி’’…’’ தல ‘’தோனியின் மனைவிக்கு பிறந்தநாள்…

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றுவித கோப்பைகளையும் வென்று கொடுத்த தலைசிறந்த கேப்டன் தோனி.  இவர் சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில், இவரது அனைத்து வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகளிலும் உடனிருப்பவர் அவரது மனைவி சாக்‌ஷி.

இன்று அவருக்குப் பிறந்தநாள் ஆகும். எனவே தோனியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் டுவிட்டர் பக்கத்தில் , எங்கள் சூப்பர் தலைவிக்கு சூப்பர் பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளனர். #yellove'ly times ahead! #WhistlePodu