1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (15:46 IST)

பீஸ்ட் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி இதுதான்!

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது என்ற தகவல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கசிந்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதி செய்துள்ளார்
 
இதனை அடுத்து பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளிவர உள்ளது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது