''பீஸ்ட் ''படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லை?
பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்-பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸாகவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பீஸ்ட் பட ஆடியோ வெளியீடு நடைபெறாது எனத் தகவல் வெளியாவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
விஜய்யின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீடும் பிரமாண்ட நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் பட அரபிக் குத்து பாடல் இசை வெளியிட்டு விழாவில் பிரமாண்டமாக வெளியாகும் என ரசிகர்கள் நினைத்தது நடக்காதுபோலிருக்கிறது.