1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (00:04 IST)

விஜய்யை சந்தித்தாரா பிரஷாந்த் கிஷோர்? பீஸ்ட் படக்குழு விளக்கம்

பீஸ்ட் பட ஷூட்டிங்கின்போது, பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்ததாக கூறப்பட்ட  நிலையில் இதுகுறித்த படக்குழு விளக்கம் அளித்துள்ளனர்.

மிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்  விஜய்.  நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்-பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வரும்  ஏப்ரல் மாதம் 13 ஆம்  தேதி  கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸாகவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இ ந் நிலையில்  இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தபோது, பிரபல தேர்தல்    வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்ததாகவும் அரசியல் குறித்து சுமார் 1 மணி நேரம் வரை பேசியதாகவும் ஒரு தகவல் வெளியானது.

 ஆனால், இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை எனவும் இது வதந்தி என பீஸ்ட் படக்குழு தெரிவித்துள்ளது.