செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (17:30 IST)

அமைச்சர் என்பதால் விலக்கு அளிக்க முடியாது… நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு கண்டனம்!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளிக்க முடியாது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011–ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்து அமைச்சராக இருந்தவர் தற்போது திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி. அப்போது அவர் போக்குவரத்துத் துறையில் பலருக்கும் வேலை வாங்கித் தருவதாக 1.6 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது திமுகவே இந்த குற்றச்சாட்டை பெரிய அளவில் பேசியது.

ஆனால் இப்போது அவரே திமுகவில் அமைச்சராக உள்ளார். இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி ஆஜர் ஆகவில்லை. இது சம்மந்தமாக அவரின் வழக்கறிஞர் ‘செந்தில் பாலாஜி இப்போது அமைச்சராக இருப்பதால் மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை ‘ எனக் கூறியிருந்தார்.

ஆனால் இந்த பதிலை ஏற்காத நீதிபதிகள் ’அமைச்சர் என்பதால் செந்தில் பாலாஜிக்கு விலக்கு அளிக்க முடியாது. சட்டத்தின்முன் அனைவரும் சமம். கண்டிப்பாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஆஜராக வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.