செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (09:42 IST)

பதாய் ஹோ ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமான ஊர்வசி!

பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஊர்வசி ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். போனி கபூர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க உள்ளாராம். இதில் திருமண வயதில் மகனும் மகளும் இருக்கும் நிலையில் கர்ப்பமாகும் முதிய பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.