யாஷிகாவின் நிலைமை தாய் உருக்கமான பேட்டி!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 27 ஜூலை 2021 (12:35 IST)

நடிகை யாஷிகா ஆனந்தின் கார் மாமல்லபுரம் அருகே விபத்து நடந்த நிலையில் அவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இடுப்பு எலும்புகளும், கை கால் எலும்புகளும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும் என்றாலும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யாஷிகாவின் உடல்நிலை குறித்து பேட்டி கொடுத்துள்ள அவரின் தாய்,
" யஷிகாவுக்கு கால், இடுப்பு, வயிற்றுப்பகுதியில் பலமாக அடி பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்போ அவ நல்லா இருக்கா. ஆனால், அவர் சுயநினைவு வந்ததும் பாவனி குறித்து விசாரித்தாள், " வெண்டிலேட்டர்-ல வச்சரிக்காங்கன்னு சொல்லியிருக்கோம்" பாவனி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாது.

பாவனி என் போனை யூஸ் பண்ணியிருந்தா. என் மொபைல் முழுக்க அவங்க போட்டோஸ் தான் இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு என கூறி அழுதார். யாஷிகா நடக்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :