திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (09:24 IST)

எவிக்சன் பட்டியலில் ஐஸ்வர்யா! டேனியலுக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றுவாரா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத், டேனியல் கடந்த இரண்டு வாரங்களில் வெளியேறிவிட்ட நிலையில் இன்னும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை வெளியேற்ற சக போட்டியாளர்களே தீவிரத்தில் உள்ளனர். ஐஸ்வர்யா-யாஷிகா ஜோடியை பிரித்து இருவரையும் வெளியேற்றிவிட்டால் பிக்பாஸ் டைட்டிலை வெல்வது  மற்றவர்களுக்கு சுலபமாக இருக்கும்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் மும்தாஜ், யாஷிகாவை தவிர மற்ற அனைவருமே ஐஸ்வர்யாவை எவிக்சன் பட்டியலில் தேர்வு செய்யப்படுவது போல் உள்ளது. ஐஸ்வர்யாவை பாலாஜி எவிக்சன் செய்யும் போது மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் கூறுவதைபோல் தட்டிக்கொடுப்பதும் சர்ச்சையை ஏறபடுத்தியுள்ளது. மேலும் ரித்விகா, ஐஸ்வர்யாவை தேர்வு செய்து அவர் ஒரு பலமான போட்டியாளர், அவரால் நாம் எல்லோரும் ஷைன் ஆகி கொண்டு இருக்கின்றோம் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் இந்த வாரம் எவிக்சன் பட்டியலில் சிக்கும் ஐஸ்வர்யாவை மக்கள் வெளியேற்றுவது உறுதி. நேற்று டேனியல் வெளியே சென்றபோது அடுத்த வாரம் நானும் வெளியே வந்துவிடுவேன் என்று ஐஸ்வர்யா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படுமா? அல்லது பிக்பாஸ் தில்லுமுல்லு மூலம் ஐஸ்வர்யா எவிக்சனில் இருந்து தப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்