ரன்பீர் கபூர்- ஆலியாபட்டை கோயிலுக்குள் விடாமல் தடுத்த பஜ்ரங் தொண்டர்கள்
பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதி ரன்பீர் கபூர்- ஆலியாபட்டை காளி ஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது, அவர்களை உள்ளே விடாமல் பஜ்ரங் தொண்டர்கள் தடுத்தனர்.
பாலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி ரன்பீர்- ஆலியாபட் தம்பதி நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா படம் வெளியாகவுள்ளது.
இப்படம் வெற்றிபெற வேண்டுமென்ற ரன்பீர்- ஆலியாபட் தம்பதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
அப்போது. பஜ்ரங் தள தொண்டர்கள் அவர்கள் இருவரையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, ரன்பீர் கபூர், தனக்கு மாட்டிறைச்சி பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதனால் தான் அவரை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று பஜ்ரங் தள நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.