புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:24 IST)

பெண்களை மல்ட்டி கெட்டப்பில் Murder பண்ணும் பிரபு தேவா - பஹீரா ட்ரைலர்!

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார்.
 
இந்நிலையில் தற்போது பிரபுதேவா வைத்து பஹிரா என்ற புது படத்தை இயக்கி வருகிறார். சைக்கோ கொலைக்காரனாக பிரபு தேவா நடித்திருக்கும் இப்படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ரக ரகமாய் பல நடிகைகளை இறங்கியுள்ளனர். பல வித கெட்டப்பில் பிரபு தேவா மிரட்டியிருக்கும் இப்படத்தில் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.