1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:22 IST)

பாபா படத்தின் ரி ரிலீஸ்…. நீக்கப்படும் அரசியல் காட்சிகள்!

பாபா படத்தின் ரி ரிலீஸ் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் பாபா. இப்படத்தை பாட்ஷா, வீரா படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டிங், ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகிறது. ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தில் அப்போதைய அரசியலை பிரதிபலிக்கும் சில காட்சிகள் இடம்பெற்றன. மேலும் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அதையெல்லாம் இப்போது நீக்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் ரஜினி 7 மந்திரங்களை பயன்படுத்துவார். அதில் இரண்டு மந்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.