வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (16:13 IST)

பாபா படத்தின் படுதோல்வி… பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்களா 3 தமிழ் நடிகர்கள்?

ரஜினிகாந்தின் பாபா திரைப்படம் ரிலீஸான போது அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற படம் பாபா. இப்படத்தை பாட்ஷா, வீரா படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியே இப்படத்தை தயரித்திருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் வெளிய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்படத்திற்கு ரீ எடிட்டிங், ரீமிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படு என்ற தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் பாபா படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. பாபா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி தோல்வி அடைந்த நிலையில், அப்போது 3 நடிகர்கள் அந்த தோல்வியை பார்ட்டி வைத்து கொண்டாடியதாகவும், அதில் ஒரு நடிகர் இப்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.